திருவாரூரில் பரபரப்பு - நடுரோட்டில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை.! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் பரபரப்பு - நடுரோட்டில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான செந்தில் (எ) ஓணான் செந்தில் என்பவர் மீது கொலை, கொள்ளை, சிலைக் கடத்தல், ஆள் கடத்தல் என்று பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செந்தில் கடந்த 2016-ம் ஆண்டு வலங்கைமானில் நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைக்காக திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்குச் சென்றுள்ளார். அங்கு விசாரணை முடிந்து கார் மூலம் ஊருக்குத் திரும்பியுள்ளார்.

இதையடுத்து கார் கொரடாச்சேரியிலிருந்து குடவாசலுக்கு இடையே நாகலூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் ஒரு காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் செந்தில் சென்ற காரை வழிமறித்து செந்திலை அரிவாளால் வெட்டினர். இதனைத் தடுக்க வந்த வழக்கறிஞர் அகிலனையும் தாக்கியுள்ளனர்.

பின்னர், அந்தக் கும்பல் செந்திலின் தலையை துண்டித்து விட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, காயமடைந்த வழக்கறிஞர் அகிலனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், செந்திலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

popular rowdy senthil murder in tiruvarur


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->