இது காலா கில்லா.. ஒரு பிடி மண்ண கூட எடுத்துட்டு போக முடியாது..! கரூரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!!
Poster put up Senthil Balaji supporters in karur gone viral
தமிழக முழுவதும் நேற்று காலை முதல் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள், மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கோவை, கரூர், ஹைதராபாத், பெங்களூர், கொச்சி ஆகிய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை கரூர் மேயர் கவிதா தலைமையிலான அதிமுகவினர் கடுமையாக தாக்கியதோடு வருமானவரித்துறை அதிகாரிகள் பயணம் செய்த காரின் கண்ணாடியை உடைத்தனர்.
இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் கரூர் மாவட்டத்திற்கு சோதனை செய்ய சென்ற 25க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் திமுகவினர் முற்றுகையிட்டதால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்யாமல் திரும்பிச் சென்றனர். பிறகு நேற்று மாலை காவல்துறையினர் உதவியுடன் மூன்று இடங்களில் மட்டும் வருமான வரி சோதனையானது நடைபெற்றது.
இதற்கிடையே கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளராக கருதப்படும் டி.எம் செல்வேந்திரன் என்பவர் சார்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்யாமல் திரும்பி சென்றதை விமர்சிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
அந்த போஸ்டரில் "கிளம்பு கிளம்பு அந்துபோச்சு! இது காலா கில்லா.. இங்க இருந்து ஒரு பிடி மண்ண கூட நீ எடுத்துட்டு போக முடியாது" எனக் குறிப்பிட்டு பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Poster put up Senthil Balaji supporters in karur gone viral