மின் இணைப்பு கணக்கெடுப்பு பணி தீவிரம் ! வீடு வீடாக செல்லும் மின்வாரிய அதிகாரிகள் ! - Seithipunal
Seithipunal


மின் இணைப்பு கணக்கெடுப்பு பணியானது சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெறுகிறது ! 

தனி வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின் இணைப்பு கணக்கெடுக்கும் பணியானது மின்வாரிய அதிகாரிகள் மூலம் நடைபெற்று வருகிறது. கடந்த பத்தாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள மின் கட்ட உயர்வானது உயர்வானது வீடுகளுக்கான மின் கட்டணம் 12% முதல் 52% வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட் 8 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்துள்ள தனி வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இப்பணியானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவதற்கு பலர் தனி வீடுகளில் இரண்டு மின் இணைப்பு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு இரண்டு மின் இணைப்பு பெற வேண்டுமானால் வீட்டில் இரண்டு சமையல் அறைகளை காண்பிப்பது கட்டாயமாகும். மேலும் ஒரு குடும்பத்தினர் தனித்தனியாக வசித்து வந்தால் அவர்கள் தங்களது குடும்ப அட்டைகளை தனித்தனியாக காண்பிக்க வேண்டும்.

தனி குடியிருப்பில் ஒரு வீடு தவிர மற்ற வீடுகள் வாடகை அல்லது குத்தகைக்கு விட்டிருந்தால் அதற்கான ஒப்பந்த ஆவணத்தை காண்பிக்க வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள எட்டு ரூபாய் என்ற விகிதத்தில் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வருவாயை பெருக்கும் நோக்கில் தற்பொழுது நடைபெற்று வரும் இந்த கணக்கெடுப்பு பணியினால் முறையாக விண்ணப்பித்து அரசு நிர்ணயத்தை கட்டணத்தை செலுத்தி மின்னிணைப்புகள் பெற்றுள்ள பயனாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power connection survey work intensity officials going door to door


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->