7½ சனி தோஷத்துக்கு பயந்து விசைத்தறி ஆலை அதிபர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் ஏழரை சனி தோசத்துக்கு பயந்து விசைத்தறி ஆலை அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த அண்ணாநகர், மின்னகாடு பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (44). இவர் இப்பகுதியில் விசைத்தறி ஆலை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ஜமுனா. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனசேகர் தனது மனைவிடமும், பெற்றோரிடமும், தனக்கு ஜாதகத்தில் ஏழரை சனி நடக்கிறது. இதனால் ஏதாவது விபரீதம் நடக்கும் என்று பயமாக இருப்பதாக அவர்களிடம் கூறி வந்துள்ளார்.

அதற்கு அவர்கள் அதெல்லாம் ஒன்றும் நடக்காது என்று ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனசேகருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு டாக்டரிடம் சென்று வந்தார். இதையடுத்து வீட்டில் படுத்து தூங்கிய தனசேகர் நள்ளிரவு திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power loom owner commits suicide in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->