மின்கட்டண உயர்வு தொழில்களை முடக்கும் - தொழிற் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு ..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நேற்று மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்தது. இந்தக்கூட்டத்தில்  பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிற் சங்க நிர்வாகிகள் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் .

இந்நிலையில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் தெரிவித்ததாவது:

காற்றாலை உற்பத்தி மின்சாரத்தை சேமிக்கும் வசதியை செய்யாததால் ரூ. ஆயிரத்து தொள்ளாயிரம்  கோடி இழப்பு ஏற்பட்டது என தெரிவிக்கப்ட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆறு சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு தொண்ணூறு சதவீத மக்களின் சம்பளம் ஆண்டுதோறும் ஆறு சதவீதம் அதிகரிப்பதில்லை. எனவே ஆண்டுதோறும் மின்  கட்டணம் உயர்த்துவதை கைவிட வேண்டும்.

திரையரங்குகள், ஓட்டல்கள், பல்பொருள் அங்காடிகள், திருமண மண்டபங்கள், நோய் கண்டறியும், உடற்பயிற்சி மையங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8.05லிருந்து ரூ.9.50 ஆகவும், தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு உள்கட்டமைப்பு வசதிக்கான வளர்ச்சி கட்டணம் ஒரு இணைப்புக்கு ரூ.ஆயிரத்து நானூறு லிருந்து ரூ.இரண்டாயிரத்து எண்ணூறு ஆக உயர்த்துவதை ஏற்க முடியாது எனவே கட்டண உயர்வை கைவிட்டுவிட்டு மின் பகிர்மான கழகம் லாபம் அடையும் வகையில் பணிபுரிய வேண்டும்.

இதுகுறித்து மடீட்சியா தலைவர் சம்பத் தெரிவிக்கையில், சிறு, குறு நிறுவனங்களுக்கு இதுவரை 'பவர் பேக்டர்' கட்டுப்பாடுகள் இல்லை. தற்போது குடிசைகள், வீடுகள் தவிர அனைத்து இணைப்புகளுக்கும் பவர் பேக்டர் உண்டு என்பது பற்றிய புரிதல் இல்லை.

மின்சார தட்டுப்பாடு, மின்தடை உள்ள காலத்தில் 'பீக் ஹவர்' அமலானது. இந்த நேரத்தில் தொழில் நிறுவனங்கள் தங்கள் மின் பயன்பாட்டை குறைக்க கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

மின்சார தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் இம்முறை தேவையில்லை. இதுவரை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.முப்பத்தைந்து ஆக இருந்த நிலையான கட்டணம் இருபது மடங்கு உயர்ந்துள்ளது. 

இந்த கட்டணத்தை மின் பயன்பாட்டு கட்டணத்தில் கழிக்காமல் தனியாக வசூலிப்பது முறையானதாக அல்ல. தற்போது மின் கட்டணம் ஆண்டுதோறும் ஆறு சதவீதம் உயர்த்தப்படும் என்பதை எப்படி நிர்ணயித்தனர் என தெரியவில்லை. மின் கட்டண உயர்வு அமலானால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்படுவர். இதனால் சிறுதொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்படும். எங்களின் கருத்துக்கு ஆணையம் சாதகமான முடிவை தரவில்லையென்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.

இரு ஆண்டுகளுக்கு பழைய கட்டணம் தமிழ்நாடு உணவு பொருள் வியாாபரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாசம் தெரிவித்ததாவது ,

தற்போது 'பீக் ஹவர்' ஆறு மணி நேரத்தில் இருந்து எட்டு மணி நேரமாக உயர்த்தப்பட்டதை திரும்ப பெற வேண்டும். ஆண்டுதோறும் ஆறு சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தாமல் மூன்று ஆண்டுகளுக்கு ஆறு சதவீதம் உயர்த்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பல பகுதிகளில் குடியிருப்புக்கு வழங்கிய மின் இணைப்பிலேயே சிறு தொழில்கள் நடத்துகிறார்கள். இதை மின் வாரியம் கண்டறிந்தால் இந்த இழப்பை தவிர்க்கலாம்.

பெறிய நிறுவனங்கள் சூரிய மின்சக்தி, காற்றாலையில் மின்சாரம் தயாரிப்பதால் செலவு குறையும்.  சிறு, நடுத்தர தொழில்கள் அரசு மின்சாரத்தை நம்பியுள்ளது. எச்.டி., டிமான்ட் கட்டணங்கள் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.முந்நூற்று ஐம்பது முதல் ரூ.அறநூறு வரை உயர்த்தப்படவுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் நிலையில் இரண்டு  ஆண்டுகளுக்கு பழைய கட்டணம், பழைய டிமான்ட் சார்ஜஸ் தொடர வேண்டும்.

நிலை, பீக் ஹவர் கட்டணம் தவிர்க்கலாம் என அப்பளம், வடகம் மோர் வத்தல் சங்க தலைவர் திருமுருகன் கூறியதாவது :

சிறு, குறு தொழில்களுக்கு நிலை கட்டணத்தை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.முப்பத்தைந்தில் இருந்து ரூ.நூறு முதல் அறநூறு வரை உயர்த்தியது மனசாட்சியற்ற செயலாகும். அதிக கிலோவாட் மின் இணைப்பு பெற்ற நிறுவனங்கள் அதிக லாபத்தில் இயங்குகிறது என்ற கண்ணோட்டம் தவறானது. மின் இணைப்பு பெறும் போது வைப்பு தொகை, மின் உபகரணங்கள் வாங்க, வளர்ச்சி கட்டணம் தவிர பல வகையில் பணம் வாங்கப்படுகிறது.

பிற பயனாளர்களுக்கு உயர்த்துவது போல் சிறு, குறு தொழில்களுக்கு யூனிட் 1க்கு 50 காசு மட்டுமே உயர்த்த வேண்டும். இதனால் நிலையான,பீக் ஹவர் கட்டணங்களை தவிர்க்கலாம். மின் கட்டணத்தை உயர்த்துவதன் காரணமாக சிறு தொழில்களை தமிழக அரசு அழித்துவிட வேண்டாம்.

விளிம்பு மக்கள் பாதிக்கப்படுவர் பா.ஜ.க தொழிற்துறை பிரிவு - சீனிவாச பாஸ்கரன் கூறியதாவது,

விவசாயத்திற்கு அடுத்து நம் நாட்டிற்கு முதுகெலும்பாக இருப்பது சிறு, குறு தொழில்கள் தான். மின்கட்டண உயர்வால் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை  அடையும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் துவங்க தயங்குவர். தி.மு.க., அரசு ஒரு பக்கம் 'இன்வெஸ்ட் இன் தமிழ்நாடு' என கூறிவிட்டு மறுபக்கம் கட்டணதாய் உயர்த்தி அவர்களை தமிழகத்திற்குள் வரவிடாமல் செய்கிறது. இதனால் விளிம்பு நிலை மக்கள் கடுமையாக பாத்திக்கப்படுவர். கட்டண உயர்வை பா.ஜ.க வன்முறையாக  கண்டிக்கிறது. தமிழக அரசு இந்த அறிவிப்பை உடனடியாக கைவிடவேண்டும்.

கட்டண உயர்வை ஏற்க முடியாது என்பதுக்கு குறித்து மடீட்சியா முன்னாள் தலைவர் செல்வராஜ் தெரிவித்ததாவது,

 சிறு தொழில்களின் நிலையை உணர்ந்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட வேண்டும். ஒரு கிலோவாட்டுக்கு ரூ.35 என்பதை ரூ.100 முதல் ரூ.600 வரை உயர்த்தியதை ஏற்க முடியாது. தொழில் நடந்தாலும், நடக்காவிட்டாலும் முன்பு மாதம் ரூ. 3920 நிலை கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது 1714 சதவீதம் உயர்ந்து 62,700 வரை கட்டவேண்டி வரும். எனவே, கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

சவுராஷ்டிரா வர்த்தக சங்க செயலாளர் தினேஷ் தெரிவித்ததாவது, மின் கட்டண உயர்வு அறிவிப்பு சிறு, குறு தொழில் புரிவோருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்து கேட்பு கூட்டங்கள் பெயரளவில் தான் நடக்கிறது. எங்கள் கருத்துகளை அரசு உடனடியாக பரிசீலனை செய்து, கட்டண உயர்வுக்கான அறிவிப்பை அவசியம் ரத்து செய்ய வேண்டும்.

- கூட்டத்தில் தென்மாவட்ட மக்கள், தொழில் துறையினர் பங்கேற்றியதில் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி தங்களின் கருத்துக்களை கேட்டனர். அப்போது எழுபத்தைந்து பேர் கருத்து தெரிவித்தனர்.  அவர்களிடமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power tariff hike will cripple industries


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->