செங்கல்பட்டில் பரபரப்பு.. மருத்தவ மாணவிக்கு பாலியல் தொல்லை.. போராட்டத்தில் குதித்த பயிற்சி மருத்துவர்கள்..!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சுமார் 2 மணி அளவில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வரிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார். 

அந்த புகார் மீது கல்லூரி முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் 30க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்கள், "செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பயிற்சி மருத்துவ மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், மாணவிகளிடம் ஆபாச பேச்சுகள் பேசுவதாகவும்" குற்றம் சாட்டில் உள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களிடம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் முதல்வர், நிலைய மருத்துவ அலுவலர், செங்கல்பட்டு நகர காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை நோயாளி ஒருவர் கத்தியால் தாக்கியதால் பயிற்சி மருத்துவர்கள் திடீரென போராட்டத்தை ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாலியல் தொல்லை காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Practicing doctors protest in chengalpattu govt hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->