ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும்.. மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பொதுமக்கள்!  - Seithipunal
Seithipunal


ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நாகர்கோவில் ஆட்சியை சந்தித்து இன்று மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட அருமநல்லூர் பகுதி ஊர் மக்கள் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்,அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தங்களது கிராமத்தில் கடந்த சுமார் 35 ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டுவந்தது.. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அருமநல்லூர் ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊராட்சிகளில் குடியிருந்து வரும் மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வந்தனர். இந்நிலையில், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக இயந்திரங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தை காரணம் காட்டி அந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது. தற்போது, அருமநல்லூர் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. 

இங்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு வரும்போது அவர்களை பரிசோதிப்பதற்கான உரிய இட வசதியும் இல்லை. இதனால், இங்கு சிகிச்சைக்காக வரும்மக்களை பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கும், தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் செல்லுமாறு வலியுறுத்த படுகிறார்கள்.எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Primary health centres should be reopened People meet the District Collector and submit a petition


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->