#BREAKING | சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை... கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை-மந்திரி எல்.முருகன், அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜீகே வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்நிலையில் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தமிழ்நாட்டில் காந்தியின் பயணம்' என்ற புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் 2,467 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்து நாட்டிற்கு அர்பணித்தார். 

இதையடுத்து அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடி, சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையடுத்து பல்லாவரம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெறும் பிரதமர் மோடி, ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலை திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi flagged off the Chennai Coimbatore Vande Bharat train


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->