கோவைக்கு சென்ற வந்தே பாரத் ரெயிலுக்கு மலர்தூவி வரவேற்பு.! வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த பிரதமர்.!
Prime minister modi shared video Vande Bharat train greeted with flowers
கோவைக்கு சென்ற வந்தே பாரத் ரெயிலுக்கு மலர்தூவி வரவேற்பு.! வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த பிரதமர்.!
கடந்த 8-ந்தேதி தமிழகத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடி சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கு சொகுசாகவும், நேரமும் மிச்சப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த ரெயில் சேவை இந்திய அளவில் தொடங்கப்பட்ட 13-வது வந்தே பாரத் ரெயில் சேவை ஆகும். இந்த வந்தே பாரத் ரெயில் சேலம் ரெயில் நிலையத்தைச் சென்றடைந்த போது பொதுமக்கள் ரெயில் நிலையத்தில் ஒன்று கூடி, ரெயிலுக்கு மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
இது தொடர்பான வீடியோவை தமிழ்நாடு பத்திரிக்கை தகவல் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இந்நிலையில், இந்த வீடியோவை பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், நேற்று பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் "வந்தே பாரத் ரெயிலுக்கு சேலத்தில் அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. வந்தே பாரத் விரைவு ரெயில் செல்லும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற உற்சாகம் பொதுவாகவே காணப்படுகிறது. இந்த உற்சாகம் இந்திய மக்களிடையே காணப்படும் பெருமிதத்தைக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Prime minister modi shared video Vande Bharat train greeted with flowers