காவி(ய) தலைவன் போஸ்டர் விவகாரம்..!! அச்சக உரிமையாளர் கைது..!! - Seithipunal
Seithipunal


அம்பேத்கரின் 66வது நினைவு நாள் நாடும் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதற்காக தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அம்பேத்கரின் படத்திற்கு காவி சட்டை அணிவித்து நெற்றியில் பட்டை குங்குமம் வைத்தவாறு "காவி(ய) தலைவனின் புகழ் போற்றுவோம்" என்ற வாசகத்துடன் இந்து மக்கள் கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினரின் போஸ்டரை அகற்ற வேண்டும் என காவல் நிலையத்தில் பல்வேறு அமைப்பினர் புகார் அளித்தனர்.

இதனால் கும்பகோணம் நகரில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக கும்பகோணம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் குருமூர்த்தியை கும்பகோணம் போலீசார் கைது செய்து கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சுவரொட்டியை அச்சிட்டதாக கும்பகோணம் உப்புக்கார தெருவில் அச்சகம் நடத்தி வரும் மணிகண்டன் என்பவரை கும்பகோணம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அச்சிடுவதற்காக பயன்படுத்திய கணினி மற்றும் மின்னணு பொருட்களை பறிமுதல் செய்து அவரிடம் கும்பகோணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Printing press owner arrested in Ambedkar with saffron shirt issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->