பெண்கள் இதைச் செய்தால், பழனி மலைக் கோயிலில், குடும்பத்தினருடன் வி.ஐ.பி. தரிசனம்…..! தரிசன முன்னுரிமை…!
prioity for ladies in Palani Murugan temple
திருப்பதிக்கு அடுத்து பழனியில் தான் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அலை மோதும். தமிழகத்தில், அதிக வருவாயை ஈட்டக் கூடியது, பழனி மலைக் கோயில்.
இங்கு தண்டாயுதபாணியாக வீற்றிருக்கும், முருகனுக்கு நேர்த்திக் கடனாக, மொட்டை போடுவது வழக்கமான ஒன்று. அதில், அதிகமாக ஆண்கள் தான் மொட்டை போடுவார்கள். பெண்களும் மொட்டை போடுவார்கள். ஆனால், அப்படி மொட்டை போடும் பெண்களின் எண்ணிக்கை குறைவு.
பழனி கோயில் அடிவாரம், இடும்பன் மலை, தேவர் சிலை, கிரிவலப் பாதை என பல இடங்களில், முடி காணிக்கை செலுத்துவார்கள். முடி எடுக்க 30 ரூபாய் தான் கட்டணம்.
முருகனுக்கு காணிக்கையாக அளிக்கப்படும், இந்த முடி மூலம், வருடத்திற்கு, 2 கோடி ரூபாய்க்கு மேல், தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைக்கிறது. அதிலும், பெண்களின் கூந்தலுக்குத் தான் கிராக்கி அதிகமாக உள்ளது. அந்த முடி தான் அதிக விலை போகிறது.
எனவே, இதை அதிகரிக்கும் பொருட்டு, பழனி தேவஸ்தானம் பெண்களுக்கு ஒரு சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி, இனி, பழனியில், பெண்கள் தங்கள் கூந்தலை முடி காணிக்கை செலுத்தினால், அவர்களுடன், 3 நபர்களுக்கு, தரிசனத்தில் முன்னுரிமை வழங்கப்படும், என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், அவர்கள் வி.ஐ.பி-களைப் போல், சுவாமி சன்னதியின் முன்பாக அமர்ந்து, முருகனை, கண்ணார தரிசிக்கலாம்.
English Summary
prioity for ladies in Palani Murugan temple