அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி; டிரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்..!
Prime Minister Modi will visit the US next week
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக எதிர்வரும் 12-ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாள் பயணமாக பாரிஸ் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து வாஷிங்டன் டி.சி.க்கு செல்வார் என்று கூறப்படுகிறது.
குறித்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர்டொனால்டு டிரம்ப்-ஐ பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் பிரதமர் மோடி பிப்ரவரி 12-ஆம் தேதி மாலை அமெரிக்க தலைநகரில் தரையிறங்குவார் என்று கூறப்படுகிறது. அதற்கு மறுநாள் (13-ஆம் தேதி) பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.
எனினும், மோடியின் அமெரிக்க பயணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. கடந்த வாரம்,வெளியுறவு அமைச்சகம் (MEA) பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்காக வாஷிங்டனுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறியமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Prime Minister Modi will visit the US next week