சேலம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை.! போலீசார் தீவிர விசாரணை.!
Private medical college student suicide in salem
சேலம் மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருள்மொழிகுமார். இவரது மகன் நிர்மல் குமார் (25) சேலம் அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பிசியோதெரபி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். இதற்காக நிர்மல் குமார் தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் நிர்மல்குமாரை, தினமும் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவதுபோல், நேற்று காலையும் நிர்மல்குமாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
இதனால் பெற்றோர் அவரது நண்பர் செல்போனுக்கு தொடர்பு கொண்டு நிர்மல் குமார் செல்போன் எடுக்காமல் இருப்பது பற்றி தெரிவித்துள்ளனர். இதையடுத்து நிர்மல்குமார் தங்கி இருந்த அறைக்கு நண்பர்கள் சென்றபோது அறை கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் அறை கதவை திறக்குமாறு கூறி நண்பர்கள் கதவை தட்டியுள்ளனர். ஆனால் நிர்மல்குமார் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நிர்மல்குமார் தூக்கில் பிணமாக தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நிர்மல் குமார் பெற்றோருக்கும், ஆட்டையாம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிர்மல் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நிர்மல் குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Private medical college student suicide in salem