மயங்கி விழுந்த பள்ளி மாணவி - விசாரணையில் சிக்கிய தனியார் பள்ளி ஆசிரியர்.! - Seithipunal
Seithipunal


மயங்கி விழுந்த பள்ளி மாணவி - விசாரணையில் சிக்கிய தனியார் பள்ளி ஆசிரியர்.!

சென்னையில் உள்ள வியாசர்பாடி கொடுங்கையூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், அதிகமாக வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை உட்கொண்டு மயக்க நிலையில் இருந்துள்ளார். 

இதையறிந்த மாணவியின் பெற்றோர், சிறுமியை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த பிறகு அவரிடம் நடத்திய விசாரணை நடத்தப்பட்டது. 

அதில், "தனது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ஆல்பின் பிரேம்குமார் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த போலீஸார், உடற்பயிற்சி ஆசிரியர் ஆல்பின் பிரேம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், ஆசிரியர் ஆல்பின் கடந்த சில மாதங்களாகவே சிறுமியுடன் செல்போனில், காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தைகள் பேசி, பள்ளியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து போலீஸார், ஆல்பின் பிரேம்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private school teacher arrested for harassment in chennai viyasarpadi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->