அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 1,614 பேருந்துகள் கொள்முதல்!...தமிழக அரசு டெண்டர்!
Procurement of 1614 new buses for government transport corporations tamil government tender
தமிழக போக்குவரத்துக் கழகங்களில் பழைய பேருந்துகளைக் கழித்து, புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில், இந்த நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து இருந்தார். அதன்படி, 2024-25ம் நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.1,535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பிஎஸ் 6 வகை கொண்ட 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இது தொடர்பாக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 245, விழுப்புரம் கோட்டத்திற்கு 347, சேலம் கோட்டத்திற்கு 303, கோவை கோட்டத்திற்கு 105, கும்பகோணம் கோட்டத்திற்கு 305, மதுரை கோட்டத்திற்கு 251, நெல்லை கோட்டத்திற்கு 50 என்று மொத்தம் 1,614 பேருந்துகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதில், 950 பேருந்துகள் 11 மீட்டர் நீளமும், 1,150 மி.மீ உயரமும், 484 செ.மீ டீலக்ஸ் பேருந்துகள் 11 மீட்டர் நீளமும், 1,150 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும் என்றும், 180 டீலக்ஸ் பேருந்துகள் 12 மீட்டர் நீளமும், 1150 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். ஜெர்மன் வங்கி நிதி உதவியில் இந்த பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 300 பேருந்துகள் வரை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Procurement of 1614 new buses for government transport corporations tamil government tender