தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்கிறதா திமுக அரசு..? உதயசந்திரன் ஐஏஎஸ் மீது பகீர் குற்றச்சாட்டு.!!
Prof Jawahar Nesan explains resignation from state education policy committee
மாநிலக் கல்விக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜவகர் நேசன் திடீரென நேற்றைய தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் ராஜினாமா செய்ததற்கு சில அதிகாரிகளின் மிரட்டல் தான் காரணம் என தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை குழுவில் இருக்கக்கூடிய சில அதிகாரிகள் அவரை பகிரங்கமாக மிரட்டியதாகவும், தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி பேசியதாகவும், தேசிய கொள்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க தங்களை நிர்பந்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று அறிக்கையின் மூலம் தனது ராஜினாமாவை அறிவித்திருந்த பேராசிரியர் ஜவகர் நேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர் இந்த குழு மூலம் மாநிலத்திற்கான புதிய கல்வி கொள்கை கொண்டு வருவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை மாநில கொள்கை கல்விக் கொள்கையில் திணிப்பதாகவும், மாநிலத்திற்கு தேவையான தனித்துவமான கல்விக் கொள்கையை யாரும் கொண்டு வர விரும்பவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தன்னை அநாகரிகமாக பேசும் அதிகாரிகள் குறித்து மாநில கல்வி கொள்கை குழு தலைவரிடம் பலமுறை கடிதம் மூலம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும், பதில் கடிதமும் வரவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த குழுவில் நடைபெறும் பல்வேறு குளறுபடிகள் குறித்து ஆதாரத்துடன் நிரூபித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதுகுறித்து குழுவில் உள்ள உறுப்பினர்கள் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக மாநில கல்வி குழு ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ஜவகர் நேசன் ராஜினாமாவிலிருந்து மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்காக சில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நேரடியாக முயற்சி செய்வது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதற்காக மாநில கல்வி கொள்கை குழுவில் இடம் பெற்றுள்ள சில அதிகாரிகளை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளே தகாத வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருப்பது தெரிய வருகிறது.
மேலும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக மக்கள் மன்றத்தில் தெரிவித்திருந்தாலும், மறைமுகமாக அதிகாரிகள் மூலம் தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை திமுக அரசு எடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதற்கு ஆதரவாக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மாநில கல்விக் கொள்கை ஆணையம் செயல்பட தொடங்கி 11 மாதங்கள் முடிந்த நிலையில் தற்பொழுது தேசிய கல்வி கொள்கை திணிக்க முயற்சிப்பதாக எழுத குற்றச்சாட்டு திமுக அரசின் மீது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Prof Jawahar Nesan explains resignation from state education policy committee