பாரதியார் பல்கலை. உதவி பேராசிரியர்கள் பாலியல் வழக்கு - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!
professor suspend order cancelled in sexuall harassment case chennai high court
பாரதியார் பல்கலை. உதவி பேராசிரியர்கள் பாலியல் வழக்கு - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் ஏ.மணிமேகலன். இவர் மீது அதே கல்லூரியில் உதவி பேராசிரியர்களாக பணிபுரியும் இரண்டு பெண்கள் கடந்த ஜனவரி மாதம் பாலியல் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் படி நடத்திய முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் பல்கலைக்கழகம் ஜனவரி 30ம் தேதி பேராசிரியர் மணிமேகலனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மணிமேகலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், பாலியல் புகாரை விசாரிக்கும் உள் புகார் குழுவின் தலைவராக பணிபுரியும் இடத்தில் மூத்தவர்களை நியமிக்க வேண்டும் என்று சட்டம் உள்ள நிலையில், தமக்கு எதிரான புகாரை விசாரணை செய்ய மிக இளைய பேராசிரியரை நியமித்தது தவறு என்று வாதிடப்பட்டது. மேலும், தமக்கு எதிரான புகார் குறித்த விசாரணை அறிக்கையில் குழுவில் இருந்தவர்களில் ஒருவர் கையெழுத்திடவில்லை எனவும் வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி சதீஷ்குமார், முழுமையாக விசாரணை நடத்தி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே பணியிடை நீக்கம் செய்ய முடியும் என்றும், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வைத்து பணியிடை நீக்கம் செய்தது தவறு என்றும், அந்த இடைநீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
English Summary
professor suspend order cancelled in sexuall harassment case chennai high court