சொத்து வரி, தொழில் வரி வசூல் ..பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
Property TaxProfessional Tax Collection District Collector inspects Perambakkam First Grade Panchayat
பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணம் வசூலிக்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் , கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பொதுமக்களிடம் 2024-25 ஆம் ஆண்டிற்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணம் வசூலிக்கும் முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணம் ஆகியன வசூலிக்கும் பொருட்டு 15.03.2025 மற்றும் 16.03.2025 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கிராம மக்கள் அனைவரும் 2024-25 ஆண்டு முடிய தாங்கள் செலுத்த வேண்டிய வரியினங்களை நிலுவையின்றி முழுமையாக செலுத்த வேண்டும் ஆகவே, கிராம மக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி வரியினங்களை செலுத்தி ஊராட்சியின் வளர்ச்சிக்கு துணை புரியுமாறு என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
இதில் கடம்பத்தூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் ஊராட்சி செயலாளர் ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Property TaxProfessional Tax Collection District Collector inspects Perambakkam First Grade Panchayat