அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மணல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். 

இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 50 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து அமைச்சர் பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அவரின் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். இதனை அடுத்து அவர் மீண்டும் உயர் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

அதே வேளையில் அமைச்சர் பொன்மொழிக்கு எதிராக திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனது வெங்கடேஷ் தலைமயிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வருகிறது. அதேபோன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கம் இன்று விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

property value case against Ponmudi hearing in MadrasHC today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->