பைக் டாக்ஸிக்கு எதிராக போராட்டம்.. ஆட்டோ ஓட்டுநர்களை குண்டுக்கட்டாக தூக்கிய காவல் துறை.!
Protest against bike taxi Autorickshaw drivers arrested by police
பைக் டாக்ஸியை தடை செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சம்பவத்தால் கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் பைக் டாக்சிகள் இயங்கலாம், ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது. விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம் என இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பைக் டாக்சி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டி உள்ளது. மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்சிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது. இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பைக் டாக்சிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்சி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது.
தமிழ்நாட்டில் பைக் டாக்சிகள் இயங்கலாம், ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது. விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம்போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். உரிய உரிமம், மூன்றாம் நபர் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன்தான் இயக்க வேண்டும். விதிகளின்படி பைக் டாக்சிகள் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கோவை அவிநாசி சாலையில்பைக் டாக்ஸியை தடை செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக போலீசுக்கு தெரியவந்ததை அடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை குண்டுக்கட்டாக காவல் துறை கைது செய்தது.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
English Summary
Protest against bike taxi Autorickshaw drivers arrested by police