பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் வாபஸ்! மாற்றுத்திட்டத்தை செயல்படுத்துவோம் என அமைச்சர்கள் உறுதி! - Seithipunal
Seithipunal


தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்த போராட்ட குழு உறுப்பினர்கள்!

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் பசுமை வழி விமான நிலையமாக அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டது. அதிக அளவில் விவசாய நிலம் கொண்ட பகுதி என்பதால் 13 கிராம மக்களும் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்

இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை நோக்கி பேரணி செல்லவும் போராட்டக் குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் த.மோ அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டக் குழுவைச் சேர்ந்த எட்டு பேருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் முதல்வருடன் கலந்து ஆலோசித்து மாற்றுத்திட்டத்தை செயல்படுத்துவோம் என அமைச்சர்கள் போராட்ட குழு உறுப்பினர்களுக்கு உறுதி அளித்தனர். இதனை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழுவினர் "பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் கொண்டுவரப்பட்டால் புவியியல் பாதிப்பு மற்றும் விவசாயம் பாதிப்பு என பல்வேறு பிரச்சனைகளை பற்றி அமைச்சர்களிடம் எடுத்து கூறினோம். இதனைக் கேட்டுக் கொண்ட அமைச்சர்கள் முதலமைச்சருடன் ஆலோசித்து மாற்று திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்த அதன் அடிப்படையில் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது" என தெரிவித்தனர். கடந்த 80 நாட்களாக விமான நிலையத்துக்கு எதிராக  13 கிராம மக்களின் அறவழிப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Protest against Parantur airport withdrawn Ministers assuredl implement the alternative plan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->