சென்னையில் பரபரப்பு! தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது! கொந்தளிப்பில் அரசு ஆசிரியர்கள்! - Seithipunal
Seithipunal


சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளி கல்வித்துறையின் தலைமை அலுவலகமான பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள், டெட் தேர்வு எழுதி ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சம வேலை சம ஊதியம், பணி நிரந்தரம், அரசாணைகளை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெற்று வந்தது. அவர்களுடன் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் உடன்பாடு திட்டப்படாததால் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட மாநகர் பேருந்துகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். 

அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் பள்ளி கல்வித்துறை அலுவலகத்திற்கு சுமார் 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை போலீசார் திடீரென இன்று காலை கைது செய்துள்ள சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரே அவர்களின் அடுத்த கட்ட போராட்டம் என்ன என்பது தெரியவரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

protesting teachers were arrested in the morning in Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->