பெட்ரோல்,டீசல் விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் போராட்டம்.. காங்கிரஸ் கட்சி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பெட்ரோல்,டீசல் விலை உயர்வை திரும்பப் பெறவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி மாநிலத்தில்  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை ஜனவரி 1ஆம் தேதி புதன்கிழமை  முதல் அதிகரிக்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு முடிவு செய்தது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்த துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்தார்.அதன்படி  இந்த வரி உயர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய 4 பிரதேசங்களில் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.இதனால்  புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய 4 பிரதேசங்களில் அரசு பேருந்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டன. 

இந்தநிலையில் புதுச்சேரியில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு  மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்வுக்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.அந்தவகையில் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இதுகுறித்து பேசிய எம்.பி,யும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான வைத்திலிங்கம்
புதுச்சேரியில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு  மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தி புத்தாண்டு பரிசை மக்களுக்கு அரசு வழங்கியுள்ளது என கடுமையாக சாடினார். 

மேலும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை திரும்பப் பெறவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று பேசிய வைத்திலிங்கம்பொங்கல் பரிசாக முதலமைச்சர் ரங்கசாமி ரூ.750 அறிவித்துள்ள நிலையில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல  ரூ.2000மாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவிடுத்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Protests if petrol diesel price hike is not rolled back Congress Party Announces


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->