மு.க ஸ்டாலின் காரை சுத்து போட முயன்றதாக பி.ஆர் பாண்டியன் அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவேரி நீர் பங்கீடு விவகாரம் இரு மாநில விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என வலியுறுத்தி கர்நாடக மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னையில் காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் அருகே போராட்டம் நடத்தினார்.

ஆனால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழியாக செல்வதாலும்,  மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் காவல்துறையினர் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் செல்ல மறுத்த அவர் உழைப்பாளர் சிலை முன்பு அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து பி.ஆர் பாண்டியன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயற்சி கூடும் என்பதால் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார், அவரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று திருவல்லிக்கேணி வி.என் வெங்கட்ரங்கம் சாலையில் உள்ள சமூக கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதனை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி நீருக்காக போராடிய தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PRPandian arrested for trying to block MKStalin car for CauveryIssue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->