கச்சத்தீவு விவகாரம் | பச்சை பொய் - கொதிக்கும் பிடிஆர்! - Seithipunal
Seithipunal


கச்சத்தீவு விவகாரம் குறித்து ஆர்டிஐ-யில் வெளியான தகவல் பச்சை பொய் என்று, திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

மதுரை சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு ஆதரவாக இன்று பரப்புரை மேற்கொண்ட பழனிவேல் தியாகராஜன் இது குறித்து பேசினார்.

அவரின் அந்த தேர்தல் பரப்புரையில் விவரம், "இந்த பரப்புரையில் நான் இரண்டே இரண்டு கருத்துகளை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழகம் பழைய தவறான பாதையை விட்டுவிட்டு தற்போது முன்னேறி உள்ளது.

மதுரை மாவட்டத்திற்கும், மதுரை மாநகராட்சிக்கும் பல்வேறு திட்டங்கள் கிடைத்துள்ளன. ஒரு ரூபாய்க்கு 35 பைசா வரியை கொடுத்ததை நிறுத்திவிட்டு, 29 பைசா கொடுப்பதை நாடாளுமன்றத்தில் பெருமையாக பேசுகின்றனர்.

மாநில பட்டியலில் உள்ள கல்வியை உரிமை, நிதி உரிமையை மத்திய அரசு பறித்துள்ளது. கச்சத்தீவு விவகாரம் குறித்து ஆர்டிஐ-யில் வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்கை பரப்பி வருகின்றனர்.

படித்த மாநிலமான தமிழகத்தில் இது போன்ற டுபாக்கூர் வேலை பார்க்க நினைத்தால் அது முடியாது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள், பற்று வைத்துள்ளவர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

ஒரு மக்களவைத் தேர்தலை நடத்த மூன்று மாதமாகும் என்றால், ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்துவீர்கள்? அப்படி நடத்தினால் அந்த தேர்தல் முடிய இரண்டு ஆண்டு ஆகுமே" என்று அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PTR Palanivel Thiyagarajan say About Katchatheevu issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->