மே மாதத்திற்கான பாமாயில் ஜூன் முதல் வாரம் வரை கிடைக்கும்..தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் பருப்பு, பாமாயில், சர்க்கரை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மே மாதத்தில் துவரம்பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதால், இவ்விரண்டு அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ஒப்பந்தப் புள்ளிக்கான பணிகளும் முடங்கியிருந்தன.

தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளின் பலனாக, கடந்த சில தினங்களாக நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் இரண்டும் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இதையடுத்து இந்த மாத இறுதிக்குள் அனைத்து அட்டை தாரர்களுக்கும் இவ்விரு பொருட்களை வழங்கி முடிக்கவேண்டும் எனவும், அப்படி இந்த மாதம் வாங்க முடியாதவர்கள் ஜூன் முதல் வாரம் வரை இவ்விரு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public can get Palm Oil for May month till June 1st week T n Govt announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->