சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பொதுமக்களுடன் நேரடி கலந்தாய்வு! மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்.! - Seithipunal
Seithipunal


சுற்றுச்சூழலின் மாசுபாட்டை எவ்வாறு திறம்பட கட்டுப்படுத்த இயலும் என பொதுமக்கள் பல பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களை முன்வைத்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும், அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மற்றும் வாரியத்தின் தலைமை அலுவலகத்திலும் நேரடி கலந்தாய்வு அமர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 

வாரியத்திற்கும் தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான தொடர்பினை மேம்படுத்தவும் வாரியத்தின் பணிகளை மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மற்றும் நம்பகமான முறையில் செயல்படுத்தவும் வாரியம் "நேரடி கலந்தாய்வு அமர்வு" (OHS)ஐத் தொடங்கியுள்ளது. 

தனிநபர் / தொழிற்சாலைகள் / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / பொது நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க / சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள / மாசு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இசைவாணைகள் குறித்து புகார் செய்ய மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள் / கருத்துகளை தெரிவிக்க இந்த அமர்வில் பங்கேற்று சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகளை சந்திக்கலாம். 

நேரடி கலந்தாய்வு அமர்வு ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி அல்லது 5 ஆம் தேதி விடுமுறை என்றால் அடுத்த வேலை நாளில் அனைத்து மாவட்ட அலுவலகங்கள், அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் வாரியத்தின் தலைமை அலுவலகங்களில் நடைபெறும். இதற்காக ஒரு இணையதள செயலி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

வாரியத்தின் எந்த அலுவலகத்திலும் எந்தவொரு நபரும் முன் தகவல் / அனுமதியும் இல்லாமல் நேரடி கலந்தாய்வு அமர்வில் பங்கேற்கலாம், இருப்பினும், நேரடி கலந்துரையாடலில் கலந்துகொள்ள விரும்புவோர், தங்கள் வருகைக்கு முன்னதாகவே இதற்காக வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள இணையவழி செயலியில் பதிவு செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் வாரிய அதிகாரிகள் பங்கேற்பாளர்களுக்கு நேரடி கலந்துரையாடல் நாளில் அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவும் பதிலளிக்க இயலும். இதற்காக வாரிய இணையதளமான www.tnpcb.gov.in இல் “OPEN HOUSE” என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

பங்கேற்பாளர்கள் தங்கள் புகார்கள்/கேள்விகளின் தற்போதைய நிலையைச் தெரிந்துகொள்ளவும், TNPCB வழங்கிய பதிலைப் பதிவிறக்குவதற்கும் இணைய செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

முதல் நேரடி கலந்தாய்வு அமர்வு நேற்று வாரியத்தின் அனைத்து அலுவலகங்களிலும் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகளின் ஈடுபாடு ஊக்கமளிப்பதாக இருந்தது. 

இதற்கான இணையவழி செயலியில் பதிவு செய்த 190 பேரில், 102 பேர் நேரடி கலந்தாய்வு அமர்வில் நேரில் கலந்து கொண்டுள்ளனர். தலைமை அலுவலகத்தில் 9 பேரும், மண்டல அலுவலகங்களில் 8 பேரும், மாவட்ட அலுவலகங்களில் 85 பேரும் கலந்து கொண்டனர்.

பங்கேற்பாளர்களில் சுமார் 52% பேர் தனிநபர்கள், 30% பேர் தொழிற்சாலையைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் பொது நலச் சங்கம் மற்றும் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். பங்கேற்பாளர்கள் வாரியத்தின் மூத்த அதிகாரிகளிடம் பல பிரச்சினைகளை முன்வைத்தனர். அவற்றில் குறிப்பிடத்தக்கவை: 

1) சுமார் 42% பேர் தாங்கள் எதிர்கொள்ளும் மாசு தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி விவாதித்து வாரியத்தின் நடவடிக்கையை கோரினர். 

2) 23% பேர் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் விளக்கம் கோரினர். 

3) சுற்றுச்சூழலின் மாசுபாட்டை வாரியம் எவ்வாறு திறம்பட கட்டுப்படுத்த இயலும் என மற்றவர்கள் பல பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களை முன்வைத்தனர். 

190 மனுக்களில், 112 மனுக்களுக்கு தகுந்த தீர்வு/பதில்களை வழங்கி மூலம் நேரடி கலந்தாய்வு அமர்வு நாளிலேயே முடித்து வைக்கப்பட்டது. நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு எதிர்காலத்தில் மெய்நிகர் பயன்முறையில் நேரடி கலந்தாய்வு அமர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public opinion for controlling the pollution


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->