புத்தாண்டு கொண்டாட்டம் : குமரிக்கடலில் பொதுமக்கள் இறங்க தடை.! - Seithipunal
Seithipunal


நேற்று கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

"குமரி மாவட்ட மக்களுக்கு என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டை முன்னிட்டு குமாரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

இந்த போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களிலும், கோவில்கள் மற்றும் ஆலயங்களிலும் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதேநேரத்தில் தீவிர வாகன சோதனையிலும், கடற்கரை மற்றும் மலை பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதேபோல், குமரி மாவட்டத்தில் உள்ள லாட்ஜுகள் மற்றும் விடுதிகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்களின் பாதுகாப்பை கருதி கடலில் இறங்குவதற்கும், மலை பகுதிகளில் கொண்டாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

அதிலும் குறிப்பாக ரேஸ் டிரைவிங் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தல் போன்றவை கூடாது. இதைமீறினால், வாகனம் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெற்றோர் தங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் நகைகளை வெளியே அணிந்து வரக் கூடாது. கோவில்கள் மற்றும் ஆலயங்களில் ஒலியின் அளவு அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 

இந்த புத்தாண்டிற்காக குமரியில் பதினெட்டு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public peoples not allowed in kanniyakumari sea for new year celebration


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->