#தமிழகம் | காணாமல் போன குளங்கள் - கண்டுபிடித்து தரக்கோரும் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை காரணமாக பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நொய்யல் ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நிரம்பி வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் நொய்யல் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 20 டி.எம்.சி. வரை மழைத்தண்ணீர் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. கடந்த 13 நாட்களில் நொய்யல் ஆற்றில் சென்ற வெள்ள நீரின் அளவு சுமார் 15 டி.எம்.சி.க்கு மேல் இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

நொய்யல் ஆற்றில் தென்மேற்கு பருவமழை காலத்தை தவிர்த்து மற்ற காலங்களில் கோவை மற்றும் திருப்பூர் நகரங்களின் கழிவு நீர் செல்லும் வடிகாலாக மாறி விடுகிறது. நொய்யல் ஆற்றில் 12-13ம் நூற்றாண்டுகளில் 45-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு 50க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்லும் நிலையில் இருந்துள்ளது.

இந்த நிலையில், நொய்யல் ஆற்றில் தற்போது 23 தடுப்பணைகளும், 31 குளங்களும் மட்டுமே எஞ்சியுள்ளது. மீதமுள்ள குளங்கள் தடுப்பணைகள் உடைக்கப்பட்டும், காணாமல் போயும் உள்ளது. இதனால் அந்த குளங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public wants to find Missing ponds


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->