தமிழக ரேஷன் கடைகளில் ஆய்வு செய்த புதுச்சேரி முதல்வர் - வழங்கப்படும் பொருட்களின் விவரங்கள் சேகரித்ததாக தகவல்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் என்னென்ன பொருட்கள் வழங்கப் படுகின்றன எனபது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்து விசாரித்துள்ளார். 

புதுச்சேரியில் தற்போது சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாகவும், மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கிலோவுக்கு ரூ. 1 வீதம் 20 கிலோ அரிசியும் வழங்கப்படவுள்ளது. அத்துடன் வேறு சில அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் இன்று (ஜூலை 24) காலை தனது வீட்டில் இருந்து ஆரோவில்லில் டீ குடிக்கச் சென்ற புதுவை முதல்வர் ரங்கசாமி, புதுவை திரும்பும் வழியில், புதுவையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியான சின்னமுதலியார் சாவடியில் உள்ள தமிழக ரேஷன் கடைக்குச் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம், அங்கு ரேஷனில் வழங்கப்படும் பொருட்களை வாங்கி அதன் தரத்தை சோதித்தார். 

பின்னர் மேலும் வேறு என்னென்ன பொருட்கள் மாதம்தோறும் வழங்கப் படுகின்றன என்பது குறித்தும்  கேட்டறிந்துள்ளார். முன்னதாக கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் புதுவையில் சில காரணங்களால் ரேஷன் கடைகள் மூடப் பட்டன. 

மேலும் இலவச அரிசிக்கு பதிலாக ரேஷன்கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், ரேஷன் கடைகளைத் திறக்க பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருவதால், விரைவில் மீண்டும் புதுவையில் ரேஷன் கடைகள் திறக்கப் படவுள்ளன. 

கடந்த 7 ஆண்டுகளாக புதுவையில் ரேஷன் கடைகள் மூடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது மீண்டும் இலவச அரிசியுடன் வேறு சில அத்தியாவசிய பொருட்களையும் விநியோகிக்க முடிவு செய்துள்ளதால் தான் புதுவை முதல்வர் ரங்கசாமி தமிழக ரேஷன் கடையில் விவரங்கள் கேட்டதாக தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudhucherry CM Rangaswamy Visits And Inquire in TN Ration Shops


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->