ரிசர்வ் வங்கிக்கு கள்ள நோட்டுகளை அனுப்பிய வங்கிகள்! சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார்!
Puducherry banks Fake Note deposit in Chennai RBI
புதுச்சேரியில் உள்ள இந்தியன் வங்கி, பாரத் ஸ்டேட் உள்ளிட்ட தேசிய வங்கிகளில் உள்ள பணங்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள வங்கிகளில் இருந்து லாரிகள் மூலம் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி கிளைக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் உட்பட ரூ.27,500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் சென்னை கிளை மேலாளர் புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுவாகவே வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கள்ள நோட்டுகள் வந்தால் அதை எளிதாக கண்டறிந்து விடுவார்கள். அதை மீறியும் எப்படி கள்ள நோட்டு வந்தது? அந்த கள்ள நோட்டு எப்படி ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Puducherry banks Fake Note deposit in Chennai RBI