புதுச்சேரி கல்வியியல் கல்லூரியை பெயர் மாற்றம் செய்ய வேண்டும்..MLA அனிபால் கென்னடி வலியுறுத்தல்!
Puducherry College of Education should be renamed MLA Anibal Kennedy urges
புதுச்சேரி கல்வியியல் கல்லூரியை புதுச்சேரி அரசு கல்வியியல் கல்லூரியாக பெயர் மாற்றம் செய்து அரசாணைப் பிறப்பிக்கப்பட வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி சட்டபேரவையில் பூஜ்ஜிய மணி நேரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பேசியதாவது .புதுச்சேரி கூட்டுறவு கல்வியல் கல்லூரி (PONDICHERRY CO OPERATIVE COLLEGE OF EDUCATION)உயர்க்கல்வித் துறையில் சேர்க்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த 2023-2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தீர்கள்.
அதன் அடிப்படையில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கைக்குப் புதுச்சேரி அரசின் CENTAC மூலம் அனுமதி பெறப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றன.மாணவர்கள் கல்விக் கட்டணமானது அரசு கலைக்கல்லூரி, தொழிற்கல்லூரி, பொறியியல் கல்லூரி, மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு, அரசே கட்டணத்தை ஏற்றுக் கொள்வதைப் போல் கூட்டுறவு கல்வியியல் கல்லூரி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்று மாண்புமிகு முதலமைச்சர் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது போன்று அரசே ஏற்க வேண்டும்.
மேலும் காரைக்கால் B.Ed கல்லூரி சேர்க்கைக் கட்டணமாக ரூபாய் 5100/-மட்டுமே பெற்றுக் கொண்டு சேர்க்கை(ADMISSION) அளித்து வருகின்றனர்.ஆனால் புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ரூபாய் 51,000/- சேர்க்கைக் கட்டணம் வாங்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கேட்பதாக தெரியவருகிறது.
எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்தப்படி காரைக்கால் கல்வியியல் கல்லூரியில் வாங்கப்படுகின்ற B.Ed சேர்க்கைக் கட்டணமான ரூபாய் 5100/- அரசு (நிர்ணயம் செய்தக் கட்டணம்) புதுச்சேரி கல்வியியல் கல்லூரியிலும் வாங்கப்பட வேண்டும் உடன் உரிய அரசாணை வெளியிட்டு 200க்கு மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற உரிய ஆவண செய்ய வேண்டும்.
மேலும் கல்வியியல் கல்லூரியை உயர்க்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கல்லூரிப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.புதுச்சேரி கல்வியியல் கல்லூரியை புதுச்சேரி அரசு கல்வியியல் கல்லூரியாக பெயர் மாற்றம் செய்து அரசாணைப் பிறப்பிக்கப்பட வேண்டும்.
கல்லூரி பேராசிரியர்கள் ஊழியர்கள் சம்பளத்தினை உயர்க்கல்வித் துறை மூலம் வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Puducherry College of Education should be renamed MLA Anibal Kennedy urges