#BigBreaking || புதுச்சேரியில் வரும் 31-ம் தேதிவரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.! மதுபான கடைகளுக்கு ஆப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 10 நாட்களில் கொரோனா நோய்த்தொற்று பரவளின் தீவிரம் அதிவேகம் எடுத்துள்ளது.

தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி வருகின்ற 31 ஆம் தேதிவரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரியில் திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருகின்ற வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் 50 சதவீத அளவு இருக்கையில் மட்டுமே அமர்ந்து வர பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

வணிக வளாகங்கள், உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry lockdown jan31


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->