புதுச்சேரியில் மழை மற்றும் கிளாட் தேர்வு - சவாலான சூழலில் தேர்வு எழுதிய மாணவர்கள்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் கனமழை காரணமாக சாலைகள் வெட்டப்பட்டு வாகனங்களை ஓட்டுவது சவாலாக மாறியது. இந்நிலையில், நேற்று நாட்டின் பல பகுதிகளில் பொதுச் சட்ட நுழைவுத் தேர்வு (CLAT) நடைபெற்றது. புதுச்சேரி சட்டக்கல்லூரியில் இந்த தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டது.

புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட பல மாவட்ட மாணவர்கள், இந்த மையத்தை தேர்வு செய்து புதுச்சேரி வந்தனர். வெள்ளம் தாண்டி மாணவர்கள் தேர்வு எழுத வந்ததும், அவர்களுடன் பெற்றோர்களும் இந்த இடத்திற்கு வந்தனர்.

புதுச்சேரியில் தேர்வு எழுத 250 ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டிருந்த நிலையில், 200 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மையத்தில், பெற்றோர்களுக்கான அமர்வுகளையும், அறை வசதியையும் சட்டக்கல்லூரி நிர்வாகம் வழங்கியிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Rain and Clad Exam Students appeared in a challenging environment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->