புதுச்சேரி மாநிலத்தில் MBC இட ஒதுக்கீடு! பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாபெரும் வெற்றி!
Puducherry Rangasamy MBC PMK
புதுச்சேரி மாநிலத்தில் MBC இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.
புதுச்சேரியில் குரூப் B பணியிடங்களில் MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடுவழங்க விரைவில் அரசாணை வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டு, OBC பிரிவினருக்கான 33% இட ஒதுக்கீட்டில், MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், விரைவில் புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதன்மூலம், குரூப் B பணியிடங்களான எஸ்.ஐ., விவசாய அதிகாரி உள்ளிட்ட 9 துறைகளில் உள்ள 138 பணியிடங்களில் உள் ஒதுக்கீடு கிடைக்கும்.
இதுகுறித்து புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைநிலைய செய்திக்குறிப்பில் , "புதுச்சேரி மாநிலத்தில் உயர் வேலைவாய்ப்பில் பி கேட்டகிரியில் MBC இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட பொழுது இனமான காவலர் மருத்துவர் அய்யா, இளம் போராளி நம் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆணையை ஏற்று புதுச்சேரி மாநில அமைப்பாளர் கோ கணபதி அவர்களின் தலைமையில் புதுச்சேரி மாநிலம் அதிரும் வகையில் சட்டமன்றம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
அதன் விளைவாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உயர் வேலைவாய்ப்பில் MBC இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார்கள் அந்த அறிவிப்பை பின்பற்றாமல் அதிகாரிகள் மீண்டும் உயர் வேலைவாய்ப்பில் MBC இட ஒதுக்கீடு தர மறுத்த பொழுது மீண்டும் நமது மாநில அமைப்பாளர் கோ. கணபதி அவர்களின் தலைமையில் புதுச்சேரி முதல்வர், மாண்புமிகு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாண்புமிகு மீனவர் நலம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயனன், மற்றும் தலைமைச் செயலாளர் சந்தித்து சட்டப்பேரவையில் அறிவித்த MBC இட ஒதுக்கீடு புதிய அறிவிப்பின்படி இந்த உதவி ஆய்வாளர் உட்பட பணிகளுக்கு விதியை திருத்தம் செய்து MBC இட ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தோம்.
அப்போது பத்திரிகையாளர் சந்திப்பை நமது அமைப்பாளர் அவர்கள் அதிகாரிகளுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்கள் இல்லை என்று சொன்னால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்கள் மேலும் இந்த இட ஒதுக்கீடு தவறும் பட்சத்தில் ஆளுகின்ற பாஜக NR அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவித்தார்கள்.
அதன் அடிப்படையிலே இன்றைய தினம் புதுச்சேரி அரசு நல்ல அறிவிப்பை வெளியிடப்பட்டது, இந்த அறிவிப்பு MBC உள்ள ஜாதிகளுக்கு மிகப்பெரிய திருப்புமுனை உருவாக்கும் ஆகவே புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சியினுடைய வரலாற்றில் இந்த இட ஒதுக்கீடு காலத்தால் பேசப்படும் , போராட்டம் மற்றும் மனு கொடுத்த பொழுது கலந்து கொண்ட அத்தனை பாட்டாளி சொந்தங்களுக்கும், தொடர்ந்து இந்த இட ஒதுக்கீடு போரில் ஆதரவு தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Puducherry Rangasamy MBC PMK