மாற்றுத்திறனாளி வயிற்றில் சோடா பாட்டில்! சைகையில் தெரிவித்த அதிர்ச்சி தகவல்! திணறிய போலீசார்!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை, கீரனூரை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி தனது ஆசனவாயிலில் ரத்தம் வருவதாக தெரிவித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். 

அப்போது அவரது நடவடிக்கை இயல்புக்கு மாறாக காணப்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். 

மேலும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது மாற்றுத்திறனாளி வயிற்றில் கண்ணாடியிலான குளிர்பான பாட்டில் போன்ற ஒன்று இருந்தது தெரியவந்தது. 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி டீன் மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை செய்து பாட்டிலை அகற்றலாம் என முடிவு செய்தனர். 

பின்னர் மாற்று திறனாளியின் உடலில் வேறு ஏதாவது தொந்தரவு உள்ளதா என பல்வேறு பரிசோதனைகள் மூலம் அறிந்துகொண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பின் மாற்றுத்திறனாளியின் வயிற்றில் இருந்த பாட்டில் வெளியில் எடுக்கப்பட்டது. 

மேலும் மருத்துவர்கள், மாற்று திறனாளி வயிற்றுக்குள் பாட்டில் எப்படி சென்றது என ஆய்வு செய்து வருகின்றனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு மாற்றுத்திறனாளி நலமாக இருப்பதாகவும்  மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாற்று திறனாளி தானாகவே அவரது ஆசனவாயிலில் பாட்டிலை உள்ளே நுழைத்துக் கொண்டதாக சைகையிலேயே தெரிவித்துள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இவர் தெரிவித்தது உண்மையா அல்லது வேறு ஏதாவது காரணமா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai disabled person stomach in side Soda bottle


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->