புதுக்கோட்டையில் பரபரப்பு கிளப்பிய பள்ளி, கல்லூரி மாணவர்கள்! நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


கந்தர்வகோட்டை அருகே பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்று திடீரென பேருந்து வசதி கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஒன்றியம் தஞ்சாவூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாசல்பட்டி கிராமத்திற்கு பேருந்துகள் சரிவர நிறுத்துவதில்லை எனவும் இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். 

இது தொடர்பாக எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறை என பல தரப்பினரும் பல முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் திடீரென இன்று காலை பள்ளி, கல்லூரி மாணவர் மற்றும் ஊர் பொதுமக்கள் தஞ்சாவூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றனர். இது குறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மேலும் சரியான நேரத்திற்கு பேருந்து நின்று செல்ல வழிவகை செய்யப்படும் என போலீசார் உறுதியளித்தனர். அதன் பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியலை கைவிட்டு கலந்து சென்றனர். 

இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai school and college students protested 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->