கத்தாருக்கு புறப்பட்ட விமானம் திடீரென தரையிறக்கப்பட்டதற்கு காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கத்தாருக்கு புறப்பட்ட விமானம் திடீரென தரையிறக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று கத்தார் நாட்டிற்கு விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 336 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே இந்த விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் படி அதிகாரிகள் விமானத்தில் தரையிறக்குமாறு விமானிக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து விமானியும் உடனடியாக விமானத்தை ஓடுபாதை அருகே அவசரமாக தரையிறக்கினார். 

விமானம் பரக்கத் ஆரம்பிப்பதற்கு முன்பே விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். 

இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சமீப காலமாகவே விமானத்தில் கோளாறு ஏற்பட்டு தரையிறக்கம் செய்யும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

qatar flight emergency landing in chennai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->