இனி சில்லறைக்காக அலைய வேண்டாம்! அனைத்து ரயில் நிலையங்களிலும் க்யூஆர் குறியீடு கட்டண முறை!
QR code payment system at all railway stations
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் தற்போது க்யூஆர் குறியீடு கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவில்லாத டிக்கெட்கள், நடைமேடை டிக்கெட்கள், முன்பதிவு டிக்கெட்டுகள் ஆகிய அனைத்திற்குமான டிக்கெட் கவுன்டர்களில் க்யூஆர் குறியீடு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தை எளிமையாக செலுத்தவும், பணம் கையாளும் சிக்கல்களைத் தவிர்க்கவும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பயணச்சீட்டு மையங்களில் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் யுபிஐ செயலிகளை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தலாம். கட்டணம் உறுதி செய்யப்பட்டதும், பயணச்சீட்டு வழங்கப்படும். இந்த புதிய முறை, டிக்கெட் மையங்களில் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதுடன், பயணிகளுக்கு வசதியான மற்றும் வேகமான சேவையை வழங்குகிறது.
இதன் மூலம் ரயில்வே பயணிகளின் அனுபவம் மேம்பட்டு, டிக்கெட் விநியோக முறை மேலும் திறம்பட செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
QR code payment system at all railway stations