மக்களின் இதயங்களில் அழிக்க முடியாத முத்திரையை பதித்தவர் - ராகுல்காந்தி ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வயநாடு எம்.பி.,யுமான ராகுல் காந்தி, விஜயகாந்தின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது:- 

”தேமுதிக நிறுவன விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டு வருத்தமுற்றேன். சினிமா மற்றும் அரசியலில் அழிக்க முடியாத முத்திரையை லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர் பதித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இந்த சூழலில் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul gandhi condoles to vijayakant death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->