ரவுடி சீசிங் ராஜா இல்லத்தில் ரெய்டு!...சிக்கியது முக்கிய ஆவணம்!...இதோ வெளியான பகீர் தகவல்!
Raid on rowdy sising raja house important document caught here is the released information
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை கடந்த மாதம் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர். இதையடுத்து இவர் மீதான நிலுவை வழக்குகள் மற்றும் போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் புகார் எழுந்தது.
இதன் காரணமாக, ரவுடி சீசிங் ராஜாவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய உறவினர்களின் வீடுகளில் போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர். அந்த வகையில், சென்னை வில்லிவாக்கம், சேலையூர், தாம்பரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், சென்னை கிழக்கு தம்பரம் பகுதியில் அரசு நிலம் ஒன்றை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதற்காக, ரவுடி சீசிங் ராஜா ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றது தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்பதற்காக, போலியான ஆவணங்கள் தயாரித்த நிலையில், தற்போது கமிஷன் பெற்றதற்கான ஆவணங்கள் பலீசாரின் சோதனையில் சிக்கியுள்ளது.
English Summary
Raid on rowdy sising raja house important document caught here is the released information