ரயிலில் இதை மட்டும் கொண்டு வந்துடாதீங்க.. மீறினால் அபராதம்.! - Seithipunal
Seithipunal


வருகின்ற 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வர். இதனால், பல நகரங்களில் தெருவோர பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு பட்டாசு விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தீபாவளி பண்டிகைக்கு வெளியூர்களில் தங்கியிருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்பவர்கள் பட்டாசுகளை ரயில் மூலமாகவோ அல்லது பேருந்துகளிலோ கொண்டு செல்கின்றனர். இதன் மூலம் விபத்து ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலான பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பதில்லை. இருப்பினும், ஒருசிலர் விதிமீறல்களில் ஈடுபட்டு விடுகிறார்கள். இது அனைத்து பயணிகளுக்கும் ஆபத்து விளைவிக்கிறது. ஆகவே, விதியை மீறி பட்டாசு கொண்டு சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

முதல்முறையாக பட்டாசுகளுடன் பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதி மீறல்களில் ஈடுபட்டால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது ஐந்து ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

railway department order not allowed firecrackers in train


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->