ரெட் அலெர்ட் : இன்று இரவுக்குள் இதெல்லாம் நடக்க போகிறதா..? ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான எச்சரிக்கை.!
தமிழகத்துக்கும், கேரள மாநிலத்துக்கும் நாளை அதீத கனமழை பொழியும் என்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கும், கேரள மாநிலத்துக்கும் நாளை அதீத கனமழை பொழியும் என்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர்களையும் அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
பேரிடரை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ஐந்து லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நீர் நிலைகளில் உடைப்பு ஏற்படும் பட்சத்தில் அவற்றை சீரமைக்க இவை பயன்படுத்தப்படும்.
அது போக மின்சார வாரியமும் எந்த நேரத்திலும் பணியாற்றும் வகையில் அனைத்து கட்ட ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
தமிழகத்தில் பொதுப்பணித்துறையினர் கட்டுபாட்டின் கீழ் 89 அணைகள் உள்ளன. இதில் 15 அணைகளுக்கு மேல் நிரம்பி விட்டன.
ரெட் அலெர்ட் மழையினால் மீதம் உள்ள அணைகளும் படுவேகமாக நிரம்பக்கூடும் என்பதால் உடனடியாக கண்காணிப்பில் ஈடுபடுமாறு மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு மத்திய நீர் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளருக்கும், பேரிடர் மேலாண்மை செயலாளருக்கும், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கும் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்சமயம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைப்பொழிவு காணப்படுகிறது.
இன்று இரவுக்குள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இதனை அறிந்து மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
rain alert tamilnadu windy