முதல்வர் நிகழ்ச்சியில் மாணவிகளின் துப்பட்டா அகற்றப்பட்ட விவகாரம் - காவல்துறை விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளின் கருப்பு துப்பட்டாவை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அகற்றினர். இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் கருப்பு துப்பட்டா அகற்றப்பட்ட விவகாரத்திற்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதாவது:- 

" பணியில் இருந்த காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதே காரணம். இனியும் இதுபோன்று நிகழாமல் இருக்க சென்னை காவல் பிரிவிற்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

விழா அரங்கத்திற்குள், தணிக்கை செய் போலீசார் கருப்பு துப்பட்டா அணிந்து வந்தோரிடம், துப்பட்டாவை வாங்கி வைத்தனர்" என்றுத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police explain shall remove issue in chennai cm function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->