பீகாரில் தேர்வு முறைகேடு விவகாரம்: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் கைது! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த தேர்வாணைய பணியாளர் வாரிய (BPSC) தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது மாநில அரசியலில் பெரும் விவாதமாக மாறிய நிலையில், ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், தேர்வு முறைகேட்டுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாட்னாவின் காந்தி மைதானத்தில், கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட பிரசாந்த் கிஷோரை, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்ணாவிரதத்தில் இருந்த கிஷோர், சிகிச்சை வழங்க வேண்டாம் என்றும், தனது போராட்டத்தை சாகும் வரை தொடர்வேன் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காந்தி மைதானத்தில் அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பிரசாந்த் கிஷோரை கைது செய்தது, அவரின் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து உருவான அரசியல் ரீதியான மோதலுக்கு வழிவகுக்கக் கூடும் என்று பார்க்கப்படுகிறது. இதை எதிர்த்து, பீகாரில் உள்ள சில தலைவர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் தனது ஆதரவை வெளியிட்டு, அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மாநில அரசின் நடவடிக்கைகள் மற்றும் இந்த விவகாரத்தில் நடப்பது குறித்து மக்களின் கவனம் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election malpractice issue in Bihar Prashant Kishore arrested for his hunger strike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->