இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

அண்மையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை புதுச்சேரியை புரட்டிப் போட்ட நிலையில் தற்போது மீண்டும் புதுச்சேரியில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக  எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிக்கு இடையே நிலைகொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த புயல்சின்னம் வலுவிழந்து நாளை மறுநாள் (26ம் தேதி) டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கரையேறி தமிழக நிலப்பரப்பு வழியாக அரபிக் கடலில் இறங்கும் என்றும்  இதனால் டிசம்பர் 26, 27ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain and thunder for 3 days from today Meteorological Department Alert


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->