மழை பாதிப்பு.. தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு!
Rain damage Kanimozhi MP in Thoothukudi In person inspection
தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் சீர் செய்யப்படும் என எம்.பி. கனிமொழி உறுதியளித்துள்ளார்.
மன்னார் வளைகுடா, இலங்கை கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடியில் அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், நேற்று அடைமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், 11 மாவட்டங்களில் இன்று (டிச.,14) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளதுதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் பெரும்பாலும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் சீர் செய்யப்படும் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உறுதியளித்துள்ளார். இன்று தூத்துக்குடி சூசைபாண்டியாபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி நேரில் ஆய்வு செய்தார். வெள்ள நீரை வெளியேற்ற துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் கலெக்டர் அலுவலகம், இந்திய உணவு கழகம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், ரேசன் பொருட்களை பாதுகாத்து வைக்கக்கூடிய பகுதியை சுற்றி தேங்கி நின்ற மழை நீரில் இறங்கி நடந்து சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் உணவு கழகத்தை சூழ்ந்துள்ள மழை நீரை உடனடியாக மின் மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
English Summary
Rain damage Kanimozhi MP in Thoothukudi In person inspection