வலுவிழக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகம் முழுக்க மழைக்கு வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை சென்னைக்கு கிழக்கே 500 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதிக்கு இடையே நிலை கொண்டிருந்தது. 

இது மேலும், மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வடதமிழகம் மற்றும் தெற்று ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து வருகிற 26-ந்தேதி டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கரையை கடந்து தமிழக நிலப்பரப்பு வழியாக அரபிக்கடலுக்கு செல்லும் என்பதால், வரும்  26 மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், 28-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain update Deep depression Delta districts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->