முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..அப்புறம் ஹெல்மெட் அணிய சொல்லுங்கள்..அரசுக்கு கோரிக்கைவிடுத்த EX MLA!
Raise awareness firstThen tell them to wear a helmet EX MLA appeals to the government
புதுவை மாநில பொதுமக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பின்னர் ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என ஓம்சக்தி சேகர் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது குறித்து அதிமுக உரிமை மீட்பு குழு புதுவை மாநில செயலாளர் திரு.ஓம்சக்தி சேகர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கயில் ..பொங்கல் பண்டிகையை புதுவை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இது போன்ற சூழலில் புதுவை மக்களுக்கு செயற்கை நெருக்கடியாக ஹெல்மெட் அணியும் விவகாரம் அமைந்துள்ளது.
சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரி 25 கிலோமீட்டர் தொலைவை மட்டுமே கொண்டுள்ளது. இந்த சிறிய பகுதியில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று.
குறிப்பாக பொதுமக்கள் செல்ல வேண்டிய பயண தூரம் அதிகபட்சம் 3 கிலோமீட்டருக்குள் அமைந்து விடுகிறது.அப்படி இருக்கும்போது ஹெல்மட் அணிவது அவரவர் சொந்த விருப்பமாக இருக்க வேண்டும்.
ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படாத சூழலிலேயே குற்றவாளிகளை அடையாளம் காண்பது காவல் துறைக்கு சிரமமான நிகழ்வாக உள்ளது. அப்படி இருக்க ஹெல்மெ ட் அணியும்போது குற்றவாளிகளை அடையாளம் காண்பது மிகவும் கடினமானதாக இருக்கும் என்று காவல்துறையினரே புலம்பும் நிலை இருக்கிறது.
மேலும் ஆளும் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே நகரப் பகுதியில் மட்டும் ஹெல்மெட் அணிவதற்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடியாக ஹெல்மெட் விவகாரத்தில் ஒரு நல்ல முடிவை காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்.
எனவே பொதுமக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பின்னர் ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என ஓம்சக்தி சேகர் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
English Summary
Raise awareness firstThen tell them to wear a helmet EX MLA appeals to the government