படை நிறுத்தி பராண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் 1039-வது சதய விழா!பந்தல்கால் நடும் முகூர்த்தம் இன்று நடைபெற்றது!
Rajaraja Cholan 1039th Sadaya Festival Panthalkal Tumu Mugurtha Held Today
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை, அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளில் ஆண்டுதோறும் சதயவிழாவாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படும் இந்த சதய விழா, இந்த ஆண்டில் வரும் நவம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு, பெரியகோவிலில் இன்று காலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பந்தக்காலுக்கு பால், மஞ்சள், தயிர், திரவிய பொடி உள்பட மங்களப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பந்தக்கால் பூமியில் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், சதய விழாக் குழுத் தலைவர் செல்வம், துணைத்தலைவர் மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், தமிழர் வெற்றி பேரவை செழியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சதய நட்சத்திர நாளான 10-ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்படும். மேலும், பல்வேறு கட்சி, இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பெரியகோவிலின் முக்கிய தெய்வங்களான பெருவுடையார், பெரியநாயகி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும் சிறப்பாக நடத்தப்படவுள்ளன.
English Summary
Rajaraja Cholan 1039th Sadaya Festival Panthalkal Tumu Mugurtha Held Today